அம்பலமாகியுள்ள ஹிட்டலரின் திட்டம் – திடுக்கிடும் தகவல்
இரண்டாம் உலகப் போரின் போது பாப்பரசரைக் கடத்த ஹிட்லர் திட்டமிட்டதாக திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.
இரண்டாம் உலகப் போரின் போது ஜெர்மனி சர்வாதிகாரி ஹிட்லரின் ஆதிக்கம் கோலோச்சியது. அப்போது இவர் சர்வதேச நாடுகளை அச்சத்தில் ஆழ்த்தி வந்தார்.
அப்போது 12-ம் பிளஸ் வாடிகனில் பாப்பரசராக இருந்தார். அவரை அங்கிருந்து ஜேர்மனிக்கு கடத்த ஹிட்லர் திட்டமிட்டிருந்தாராம். இத்தகவல் புதிதாக வெளியான புத்தகத்தில் கூறப்பட்டுள்ளது.
இப்புத்தகத்தை வாடிகன் சமீபத்தில் வெளியிட்டுள்ளது. இதை வாடிகன் அருங்காட்சியகத்தின் முன்னாள் இயக்குனரின் மகன் அன்டோனியோ நெலிகாரோ எழுதியுள்ளார்.
பாப்பரசரை கடத்த எஸ்.எஸ் கமாண்டோ என்ற சிறப்பு அதிரடிப்படையை வாடிகனுக்கு ஹிட்லர் அனுப்பி வைத்தார். அக்கமாண்டோ படை ஜெனரல் கரிவுல்ப் இது குறித்து பாப்பரசருக்கு தகவல் அனுப்பினார்.
அதில், உங்களையும், உங்களது படைகள் மற்றும் வாடிகன் நகரை கைப்பற்றுவேன். ஆவணங்கள் கலைப் பொக்கிஷங்கள் மற்றும் உங்களையும் (பாப்பரசர்) ஜேர்மனிக்கு கடத்தி செல்வேன் என கூறியிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
– See more at: http://www.canadamirror.com/canada/65570.html#sthash.XsuDpBBS.dpuf