யூரோ கிண்ணம்: பரிசுத் தொகை எவ்வளவு தெரியுமா?
ரசிகர்கள் மத்தியில் பெரிதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வரும் விறுவிறு யூரோ கிண்ண கால்பந்து தொடர் தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது.
ஐரோப்பிய அணிகள் மட்டும் மோதும் 15வது யூரோ கால்பந்து தொடர் பிரான்ஸ் தலைநகர் பாரிசில் நடந்து வருகிறது.
இதில் பங்கேற்ற மொத்தம் 24 அணிகளில் நடப்பு சாம்பியன் ஸ்பெயின், உலக சாம்பியன் ஜேர்மனி உட்பட 22 அணிகள் வெளியேறிவிட்டன.
இந்த நிலையில் இன்று நடக்கும் இறுதிப் போட்டியில் பலமான அணிகளான போர்த்துக்கல்- பிரான்ஸ் மோதுகின்றன.
போர்த்துக்கல் அணி முதல் முறையும், சொந்த மண்ணில் ஆடும் பிரான்ஸ்அணி 3வது முறையும் கிண்ணம் வெல்ல உச்சகட்டமாக மோதிக் கொள்ளும் என்பதால் இந்த ஆட்டம் ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தப் போட்டியில் வெற்றி பெறும் அணிக்கு ரூ.228 கோடி வரை கிடைக்கும். இது கடந்த 2012ம் ஆண்டு நடந்த யூரோ கிண்ண தொடர் பரிசுத் தொகையை விட 50 சதவீத அதிகம் ஆகும்.