தீவிரவாத நடவடிக்கையுடன் தொடர்புடையதாக சந்தேகத்தில் முற்றுகையிடப்பட்ட சில இடங்கள் அரசியல்வாதிகளின் செல்வாக்கு காரணமாக சீல் வைப்பதற்கான நடவடிக்கை தாமதப்பட்டுள்ளதாக வெளியான செய்திகளை பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜயவர்தன மறுத்துள்ளார்.
காலி மாவட்டத்தில் தீவிரவாதிகள் செயல்படும் பகுதிகளில் மேற்கொள்ளப்படும் தேடுதல் நடவடிக்கையின்போது அரசாங்கத்தரப்பு அரசியல்வாதி ஒருவர் தடுத்ததாக கடந்த வாரம் செய்திகள் வெளியாகின.
குறிப்பாக காலி மாவட்ட அரசாங்கத்தரப்பு உறுப்பினரே இந்த தேடுதல் நடவடிக்கையின்போது குறுக்கிட்டதாக வெளியான அந்த செய்திகளை பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன நிராகரித்துள்ளார்.
மேலும் பாதுகாப்பு படையினர்கள் அவர்கள் தீவிரவாத அல்லது பயங்கரவாத நடவடிக்கை இடம்பெறும் என சந்தேகிக்கும் எந்த பகுதியிலும் தேடுதல் நடத்த அவர்களுக்கு அதிகாரம் உண்டு என ருவான் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.
இவ்வாறு அவர்களின் தேடுதல் நடவடிக்கைகளை தடையின்றி செயல்படுத்துவதற்காக வழங்கப்பட்ட சுதந்திரம் காரணமாகவே பல சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர் என்றும் அவர் கூறியுள்ளார்.