கொழும்பு உயர் மறைமாவட்டத்திற்கு உட்பட்ட அனைத்து கத்தோலிக்க தேவாலயங்களிலும் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் இன்று திருப்பலி ஒப்புக்கொடுக்கப்படவுள்ளதாக கொழும்பு பேராயர் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
பாதுகாப்புப் பிரிவினரால் அனைத்து தேவாலயங்களுக்கு அருகிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் இன்று திருப்பலிகளில் கலந்துகொள்ள முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த மாதம் 21ஆம் திகதி கிறிஸ்தவ தேவாலயங்களில் மேற்கொள்ளப்பட்ட தற்கொலை குண்டுத்தாக்குதல்கள் காரணமாக பலர் உயிரிழந்திருந்தனர்.
இதனையடுத்து மேலும் தாக்குதல்கள் நடத்தப்படலாமென எச்சரிக்கை விடுக்கப்பட்டது. அதன் பின்னர் பாதுகாப்பின் நிமித்தம் கடந்த வாரங்கள் தேவாலயங்களில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.