அமெரிக்க நாடாளுமன்றத்தில் துப்பாக்கியுடன் நுழைந்த பெண்!
துப்பாக்கியுடன் பெண் ஒருவர் அமெரிக்க நாடாளுமன்றத்திற்குள் நுழைந்ததாக பரவிய வதந்தியால் பொலிஸார் தீவிர சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.
அமெரிக்க நாடாளுமன்றத்திற்குள் பெண் ஒருவர் துப்பாக்கியுடன் நுழைந்துள்ளதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து நாடாளுமன்ற கதவுகள் மூடப்பட்டன. விரைந்து வந்த பொலிஸார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
சோதனையில் அங்கு யாரும் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது. இந்த சோதனையால் சுமார் 40 நிமிடம் அதிகாரிகள், பார்வையாளர் அந்த பகுதிகுள் அனுமதிக்கப்படவில்லை.
இதையடுத்து மீண்டும் நாடாளுமன்றம் திறக்கப்பட்டது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
இதுகுறித்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். முன்னதாக அமெரிக்காவின் லூசியாணா, மினசோட்டா மாகாணங்களில் இரு வேறு சம்பவங்களில் கருப்பின இளைஞர்கள் இருவர் பொலிஸார் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
வெள்ளை இன பொலிஸ் அதிகாரிகளை கண்டித்து சமூக ஆர்வலர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அமெரிக்காவின் முக்கிய நகரங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.