கனடா-வீடொன்றின் சமயலறையில் ஏற்பட்ட தீயிலிருந்து தனது இளைய உடன்பிறப்புக்கள் இருவரை விரைவாக செயல் பட்ட காப்பாற்றியதற்காக 12 வயது பெண் பாராட்டப்பட்டார் .
இச்சம்பவம் ஒட்டாவாவில் நடந்துள்ளது. இவர்களது வீட்டின் சமையலறையில் ரோஸ்ட் தயாரித்து கொண்டிருக்கும் போது புகைக்கும் மணம் வெளிவந்ததாக தெரிவித்தாள்.
அலாரமும் அடிக்கத்தொடங்கி விட்டது.வீட்டிற்குள் இருக்கும் தனது தம்பியையும் தங்கையையும் காப்பாற்ற வேண்டும் என தன் உள்உணர்வு தன்னை உந்தியதாக பெண் தெரிவித்தாள்.
அனாக்கா பௌச்சர் என்ற 12 வயது பெண் இச்சமயத்தில் என்ன செய்ய வேண்டும் என தனக்கு தெரியும் என கூறினாள்.அவளது குடும்பம் இத்தகைய ஒரு நிகழ்வு ஏற்படும் போது எவ்வாறு தப்பிப்பது என பயிற்சி செயதுள்ளதாக தெரிவித்தாள். வீட்டை விட்டு வெளியேறிவிட வேண்டும் என கூறினாள்.
“ஒரு சில நிமிடங்கள் உள்ளே இருந்திருந்தால் எங்களில் ஒருவர் அகப்பட்டு கொண்டிருப்போம்.ஏதாவது பயங்கரம் நடந்திருக்கும்.”என கூறினாள்.
தீயணைப்பு வீரர்களும் விரைவில் வந்து தீயை அணைத்ததுடன் குடும்பத்தினரின் இரண்டு புனைகளையும் காப்பாற்றினர்.
மிக அழுத்தமான சூழ்நிலையிலும் விரைவாக செயல் பட்ட பௌச்சரை ஒட்டாவா தீயணைப்பு சேவையினர் பாராட்டினர்.
தீ ஏற்படும் போது என்ன செய்ய வேண்டும் என பிள்ளைகளிற்கு கற்பித்த பௌச்சரின் பெற்றோரும் பாராட்டப்பட்டனர்.