ஹிலரிக்கு ஆதரவாக முதன்முறையாக பிரசாரம் செய்த ஒபாமா
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஹிலரி கிளிண்டனுக்கு ஆதரவாக ஜனாதிபதி பராக் ஒபாமா வட கரோலினா பகுதியில் இடம்பெற்ற ஹிலரிக்கு ஆதரவான பிரசாரத்தில் முதன் முறையாக கலந்துக் கொண்டுள்ளார்.
கடந்த 2008ஆம் ஆண்டு நடந்த ஜனாதிபதி தேர்தலில் வடக்கு கரோலினாவில் ஒபாம அதிக வாக்குகளை பெற்று இருந்தார். எனவே அங்கு நடைபெறும் பிரசாரத்தில் ஹிலரி கிளிண்டனுடன் இணைந்து தேர்தல் பிரசாரம் செய்ய ஒபாமா திட்டமிட்டுள்ளதாக வெள்ளை மாளிகை அறிவிப்பு வெளியாகியிருந்தது. அதற்கமைய பிரசார நடவடிக்கைள் இடம்பெற்றன.
இந்நிலையில், அங்கு கருத்து தெரிவித்த ஹிலரி கிளின்டன், ஒபாமாவின் ஆதரவானது தனக்கு பெரும் நம்பிக்கையை அளிப்பதாக குறிப்பிட்டார். மேலும், ஒபாவின் தலைமையில் நான் வெளியுறவுத்துறை செயலாளராக கடமையாற்றி இருந்தமையை பெருமையாகக் கருதுகிறேன். அத்துடன், மகிழ்ச்சியான மற்றும் கடினமான தருணங்களில் ஒரு சிறந்த நண்பராக ஒபாமா தனக்கு தோள் கொடுத்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
அமெரிக்க அதிபர் தேர்தல் எதிர்வரும் நவம்பர் மாதம் 8ஆம் திகதி நடைபெறவுள்ளது. அதில் ஜனநாயக கட்சி வேட்பாளராக ஹிலரி கிளிண்டன் தேர்வாகவுள்ள போதிலும் அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.
தற்போதைய நிலையில் பெரும்பான்மை புள்ளிகளை பெற்றுள்ள ஹிலரி கிளிண்டன் வேட்பாளராக அறிவிக்கும் வாய்ப்பே உள்ளது. இந்நிலையில், ஹிலரிக்கு ஆதரவாக பிரசாரம் செய்து அவரை வெற்றி பெறச் செய்ய உள்ளதாக ஒபாமாக குறிப்பிட்டார்.
– See more at: http://www.canadamirror.com/canada/65429.html#sthash.WWuEGoYb.dpuf