கந்தக காற்றின் தாக்கத்தால் இன்றும் முல்லை மக்கள் பாதிக்கப்படுகின்றனர் – சிறிதரன்
யுத்த காலத்தில் பாவிக்கப்பட்ட கொத்துக் குண்டின் விளைவுகள் வன்னிப் பிராந்திய மக்கள் மத்தியில் தற்போது கூட தாக்கத்தை ஏற்படுத்துவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் குறிப்பிட்டுள்ளார்.
இன்று பாராளமன்றத்தில் இலங்கை தேசிய ஆராய்ச்சி பற்றிய விவாதத்தின் போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவு மக்கள் காச நோய் தாக்கத்திற்கு உள்ளாகின்றனர் மற்றும் போராளிகளில் பலர் புற்றுநோயின் தாக்கத்திற்கு உள்ளாகி உள்ளனர். இவற்றுக்கு எல்லாம் காரணம் யுத்த காலத்தில் பயன்படுத்தப்பட்ட கொத்துக் குண்டின் தாக்கமாகும்.
எனவே யுத்த வடுக்கள் தற்போது கூட மக்களின் தாக்கத்தை ஏற்படுத்துவதால் இதற்கு உடனடியாக சுகாதார ஆராய்ச்சி பேரவையில் தீர்வு கிடைக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.