கார்குண்டு தாக்குதலில் நால்வர் பலி!
ஏடன் விமான நிலையம் அருகில் இண்டு கார் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் 4 பேர் பலியாகி உள்ளனர். மேலும் பலர் படுகாயம் அடைந்துள்ளனர்.
இராணுவத்தினரை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
விமான நிலையம் அருகே நிறுத்தி வைக்கப்பட்ட இரண்டு கார்களில் வெடிகுண்டு வைத்து தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், ஐ எஸ் பயங்கரவாதிகள் இந்த தாக்குதலை நடத்தி இருக்கலாம் எனவும் ஏமன் இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்.