அவசரகால சட்டத்திற்கான விதிமுறைகள் அடங்கிய பிரேரணை இன்று (புதன்கிழமை) நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பின்றி நிறைவேற்றப்பட்டுள்ளது.
பயங்கரவாத தடைச்சட்டத்துடன் சம்பந்தப்பட்ட சட்ட விதிமுறைளை மாத்திரம் நேற்று நள்ளிரவு 12.00 மணி முதல் அவசரகால சட்டத்தின் கீழ் அமுல்படுத்துவது தொடர்பாக வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டது.
நாட்டினதும் நாட்டு மக்களினதும் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு பொலிஸாருக்கும் முப்படையினருக்கும் தேவையான அதிகாரத்தை வழங்குவதற்காக ஏப்ரல் 22 ஆம் திகதியிலிருந்து பொது அவசரகால நிலைமை தொடர்பான அதிவிசேட வர்த்தமானி ஜனாதிபதியால் பிரகடனப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.