இலங்கையில் எட்டு இடங்களில் கடந்த 21 ஆம் திகதி காலை முதல் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவங்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 359 ஆக அதிகரித்துள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை வெளிநாட்டவர்கள் உள்ளிட்ட 400 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதாகவும் இன்று காலை அவர் மேலும் குறிப்பிட்டார்.