கனடா நெடுஞ்சாலையில் சரக்குலாரி உருண்டது.
கனடா-சரக்குலாரி ஒன்று இன்று அதிகாலை பியர்சன் சர்வதேச விமான நிலையத்திற்கு அண்மையில் உருண்டதால் வாகனத்தின் சாரதி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
காலை 5மணிக்கு சிறிது பின்னர் நெடுஞ்சாலை 401ல் டெரி வீதி மேற்கில் லாரி ஒன்று மேற்கு பாதையில் சென்று கொண்டிருக்கையில் சரிவுப்பாதையில் நெடுஞ்சாலை மேற்கு திசையில் உருண்டுள்ளது.
வாகன சாரதி சிறிய அளவிலான தலை காயங்களிற்கு ஆளானார் என பொலிசாரின் தகவல் பிரகாரம் தெரிய வந்துள்ளது.