ஈராக் தற்கொலை குண்டு தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!
ஈராக் தலைநகர் பாக்தாத்தில் மேற்கொள்ளப்பட்ட தற்கொலை குண்டு தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 125ஆக அதிகரித்துள்ளது.
புனித ரமழான் பண்டிகையினை முன்னிட்டு பொருட்கள் கொள்வனவில் ஈடுபட்டிருந்த பொது மக்களை இலக்கு வைத்து இன்று இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இத்தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 125ஆக அதிகரித்துள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அத்துடன், 150க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இதன் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என அந்நாட்டு அதிகாரிகள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.
இதேவேளை, குறித்த தாக்குதலுக்கு ஈராக்கில் உள்ள ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத அமைப்பு உரிமை கோரியுள்ளது.
முன்னதாக நேற்று முன்தினம் பங்களாதேஷில் உள்ள உணவகம் ஒன்றினை முற்றுகையிட்ட ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் 20 பேரை கொலை செய்தனர்.
மேலும் அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளின் விமான நிலையங்களிலும் தாக்குதல் நடத்தக்கூடும் என ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் எச்சரிக்கை விடுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.