நேட்டோ கூட்டணிப் படைகளில் ஒன்றை கனடா வழிநடத்தும்: பாதுகாப்பு அமைச்சர்

நேட்டோ கூட்டணிப் படைகளில் ஒன்றை கனடா வழிநடத்தும்: பாதுகாப்பு அமைச்சர்

ரஷ்யாவுக்கு எதிராக உருவாக்கப்படும் நேட்டோவின் புதிய நான்கு கூட்டணிப் படைகளில் ஒன்றை கனடா வழிநடத்தும் என கனேடிய பாதுகாப்பு அமைச்சர் ஹர்ஜித் சஜ்ஜன் தெரிவித்துள்ளார்.

அடுத்தவாரம் போலாந்தில் நடைபெறவுள்ள நேட்டோ தலைவர்கள் மாநாட்டில் பங்கேற்கும் கனேடிய பிரதமர் ஜஸ்ரின் ரூடோ இது குறித்த அறிவிப்பை வெளியிடுவார் எனவும் சஜ்ஜன் மேலும் தெரிவித்துள்ளார்.

ரஷ்யாவுக்கு எதிராக செயற்படும் நேட்டோ படைகளுக்கு ஆதரவளிக்கும் வகையில் கருத்து வெளியிட்டுள்ள கனேடிய பாதுகாப்பு அமைச்சர், உக்ரைனின் கிரைமியா தீபகற்பத்தை ரஷ்யா தன்னுடன் இணைத்துக் கொண்டமை மற்றும் உக்ரைன் கிழக்கு பகுதியில் உள்ள ரஷ்ய சார்பு பிரிவினைவாதிகளுக்கு ஆதரவு வழங்கியமை ஆகிய இரு காரணங்களுக்காகவும் தாம் நேட்டோ படைகளுக்கு ஆதரவு வழங்குவதாகவும் தெரிவித்துள்ளார்.

நேற்று முன்தினம் கனேடிய நாடாளுமன்றில் உரையாற்றிய அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா கனடா போன்ற சிறந்த நாடுகள் பலவற்றின் பங்களிப்பு உலகத்திற்கும், நோட்டோ போன்ற அமைப்புக்களுக்கும் தேவைப்படுவதாக வலியுறித்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

– See more at: http://www.canadamirror.com/canada/65224.html#sthash.MyUfF2Dj.dpuf

Next Post

Leave a Reply

Your email address will not be published.

  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
Easy24News
Easy24News
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News