ஐ.நா மனித உரிமை ஆணையாளர் சாட்சியமின்றி குற்றம் சுமத்தியுள்ளார் – சிங்கள ஊடகம்
ஐ.நா மனித உரிமை ஆணையாளர் செய்யத் ராட் அல் ஹூசைன் சாட்சியங்களை முன்வைக்காது இலங்கைக்கு எதிராக போர் குற்றங்களை முன்வைத்துள்ளார் என தெரிய வந்திருப்பதாக சிங்கள பத்திரிகை ஒன்று தெரிவித்துள்ளது.
விடுதலைப் புலிகளின் ராதா சோனியா, இம்ரான் பாண்டியன் ஆகிய படைப் பிரிவுகளில் இருந்த புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் வழங்கிய பொய் தகவல்களின் அடிப்படையிலேயே மனித உரிமை ஆணையாளர் இந்த பாரதூரமான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளதாக ஜெனிவா மனித உரிமை பேரவையின் தகவல்கள் தெரிவிப்பதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.
தமக்கு தகவல்களை வழங்கிய சாட்சியாளர்கள் யார் என்பதை வெளியிட மனித உரிமை ஆணையாளர் தடைவிதித்துள்ளார்.
சாட்சியாளர்களை மறைத்து இலங்கை அரசின் மீது குற்றச்சாட்டுக்களை சுமத்துவது சட்டவிரோதமான செயல் எனவும் அந்த தகவல்கள் கூறியுள்ளன.
சாட்சியாளர்களான முன்னாள் புலி உறுப்பினர்களுக்கு சுவிற்ஸர்லாந்து உட்பட 4 நாடுகள் அரசியல் தஞ்சம் வழங்கியிருப்பதாகவும் அந்த சிங்கள பத்திரிகை கூறியுள்ளது.