கனடா வன்கூவர் வருடாந்த அணிவகுப்பில் பிரதமர்ரூடோ பங்கேற்பார்!
கனடா வன்கூவரின் பெருமைமிக்க வருடாந்த அணிவகுப்பில் கனேடிய பிரதமர் ஜஸ்ரின் ரூடோ கலந்து கொள்ளவுள்ளதாக பிரதமர் அலுவலக செய்திகள் தெரிவிக்கின்றன.
இது குறித்து பிரதமர் அலுவலக பேஸ்புக் தளத்தில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த தகவலின் பிரகாரம் ‘எதிர்வரும் ஜூலை 31 ஆம் திகதி நடைபெறவுள்ள வன்கூவர் சமூகத்தின் பெருமைக்குரிய வருடாந்த அணிவகுப்பில் பிரதமர் பங்கேற்கவுள்ளார் என்பதை அறிவிப்பதில் உற்சாகமடைகிறோம்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பதவியிலிருக்கும் போது வன்கூவர் அணிவகுப்பு நிகழ்வுகளில் கலந்து கொள்ளும் முதலாவது கனேடிய பிரதமர் ஜஸ்ரின் ரூடோ என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தகவலானது 5 லட்சம் பார்வையாளர்களை ஈர்த்துள்ளது.
அதேவேளை எதிர்வரும் 3 ஆம் திகதி நடைபெறவுள்ள ரொறன்ரோ வருடாந்த அணிவகுப்பிலும் ரூடோ கலந்து கொள்ளவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாக்கும்