ஐக்கிய தேசிய கட்சி தலைமையிலான அரசாங்கத்தை வீழ்த்துவதற்கான முதலாவது மக்கள் சந்திப்பு கண்டியில் நடைபெறவுள்ளது.
‘பொறுத்தது போதும்’ என்ற தொனிப்பொருளில் எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இன்று இந்த மக்கள் சந்திப்பு நடத்தப்படவுள்ளது.
கண்டி பிரதான சந்தைக்கு முன்பாக பகல் 2 மணியளவில் குறித்த சந்திப்பு நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் அனைத்து கட்சிகளும் ஐந்து பிரதான காரணங்களை அடிப்படையாக வைத்து கலந்துகொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதில் பெருந்திரளான மக்கள் கலந்துகொள்வார்களென எதிர்பார்க்கப்படுகின்றது.