தாய்லாந்தில் அந்நாட்டு இளவரசியை பிரதமர் வேட்பாளராக அறிவித்து தோல்வியடைந்த ஷினவத்ரா கட்சியை கலைத்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தாய்லாந்தில் பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் ஷினவத்ரா கட்சி சார்பில் பிரதமர் வேட்பாளராக அந்நாட்டு இளவரசி உபோல் ரத்னா போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டது.
இவர் அமெரிக்கரை திருமணம் செய்து கொள்வதற்காக அரச பதவிகளை இழந்தார். பின்னர், விவாகரத்தாகி நாடு திரும்பினார்.
இந்நிலையில், அந்நாட்டு மன்னரும், உபோல் ரத்னாவின் சகோதரருமான மஹா வஜ்ரிலாங்கோன் உபோல், தேர்தலில் போட்டியிடுவதற்கு ரத்னாவுக்கு எதிர்ப்பு தெரிவித்தார்.
இந்நிலையில், இளவரசியை பிரதமர் வேட்பாளரை முன்னிறுத்தும் முயற்சியில் தோல்வியடைந்ததால் அந்நாட்டு அரசியலமைப்பு நீதிமன்றம் ஷனவத்ரா கட்சியை கலைத்து உத்தரவிட்டுள்ளது. மேலும், கட்சியின் பிரதிநிதிகள் 10 ஆண்டுகள் அரசியலில் ஈடுபடுவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.