சர்வதேச மகளிர் தினம் (International Women’s Day) ஆண்டு தோறும் மார்ச் 8 ஆம் திகதியன்று உலகெங்கும் கொண்டாடப்படுகிறது.
ஐக்கிய நாடுகள் சபையால் அறிவிக்கப்பட்ட இந்நாளில் பல நாடுகளில் பொது விடுமுறை நாளாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலின வாதம் மற்றும் வன்முறைகளைப் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் நாளாக இந்நாள் நோக்கப்படுகின்றது.
சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படத் தொடங்கி இன்றுடன் 108 வருடங்கள்.’திறமையான பெண் அழகான உலகைப் படைக்கின்றாள்’ என்பது இலங்கையில் இன்று கொண்டாடப்படும் மகளிர் தினத்தின் தொனிப்பொருளாகும்.
எனவே பெண்கள் தங்களது திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டியது மிகவும் அவசியம். இக்கருத்தையே இன்றைய மகளிர் தினம் உணர்த்துகின்றது.