தமிழ் மொழியில் கடமையாற்றக்கூடிய பொலிஸாரின் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படுவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி மாளிகையில் நேற்றுக் காலை இடம்பெற்ற ஊடகக் கலந்துரையாடலில் ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில்,
தமிழர்கள் செறிவாகவுள்ள பகுதிகளிலுள்ள பொலிஸ் நிலையங்களில் தமிழ்ப் பொலிஸார் கூடுதலாக இருக்க வேண்டும்.
ஏனைய பொலிஸ் நிலையங்களிலும் தமிழில் கடமையாற்றக்கூடிய பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருக்க வேண்டும்.
மக்கள் தாம் விரும்பிய மொழியில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாட்டைச் செய்யக்கூடிய வசதி இருக்க வேண்டும் என்றும் ஜனாதிபதி கூறியுள்ளார்.
இந்நிலையில், பொலிஸ் சேவையில் 2,500பெண் பொலிஸ் வெற்றிடங்களை நிரப்புவதற்கான வர்த்தமானி அறிவித்தல் இன்னும் ஓரிரு தினங்களில் வெளியாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.