சீன அரசாங்கம் இந்த ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் இராணுவத்தினருக்கான செலவீனத்தை அதிகரித்துள்ளது.
சீன அரசாங்கத்தின் 2019ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் இன்று செவ்வாய்கிழமை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு சமர்ப்பிக்கப்பட்டுள்ள வரவு செலவுத்திட்டத்தில் இராணுவத்தினருக்கான செலவீனம் 7.5 வீதத்தினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய இராணுவத்தினரின் செலவீனத்துக்காக 177.61 பில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக சீன அரசாங்கம் தெரிவித்துள்ளது.
கடந்த சில ஆண்டுகளாக சீன அரசாங்கம் இராணுவத்தில் முக்கிய சீர்திருத்தங்களை முன்னெடுத்து வருகின்றது.
வெளிநாடுகளிடையே செல்வாக்கை அதிகரிக்கும் வகையில் கடற்படை மற்றும் விமானப்படையை விரவுபடுத்தியுள்ளது.
அத்துடன், இராணுவத்தின் துருப்புகளை மூன்று இலட்சமாக குறைத்துள்ளது. இவ்வாறு படைவீரர்களை குறைத்தபோதிலும், 2 மில்லியன் வீரர்களுடன் சீன இராணுவம் உலகின் பெரிய இராணுவமாக திகழ்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.