கனடாவில் திருமண விழாவில் நடிகர் விஜய்
தென்னிந்திய நடிகர் இளைய தளபதி விஜய் கனடாவில் நடைபெற்ற தமிழ்த் திருமண விழாவில் கலந்துகொண்டு மணமக்களுக்கு அறுகரிசி தூவி மனமார வாழ்த்திய படங்கள் இணையத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றது .
மணமகன் கெளதம் விஜய் மனைவி சங்கீதாவின் உறவினர் என்பதால் இத் திருமணத்திற்கு விஜய் தனது குடும்பத்தினருடன் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
விஜய் மனைவி சங்கீதா யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ரசிகர்களின் அன்புத் தொல்லையைக் குறைப்பதற்காக இருவர் விஜய்க்கு பாதுகாப்பு வழங்கியுள்ளனர்.
இத்திருமணம் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.