இந்தியர்களுக்கு வீசா வழங்குவதை ஒபாமா நிறுத்தவேண்டும் மூத்த செனட் உறுப்பினர் கோரிக்கை.
ஒபாமா நிர்வாகம் இந்தியா மற்றும் சீனா உள்பட 23 நாடுகளுக்கு குடியேற்ற மற்றும் குடியுரிமையற்ற விசா வழங்குவதை நிறுத்த வேண்டும் என்று செனட் சபை மூத்த உறுப்பினர் கோரிக்கை விடுத்து உள்ளார்.
இந்நாடுகள் அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறுபவர்களை தடுக்கும் பிரச்சனையில் ஒத்துழைப்பு அளிக்கவில்லை என்று குற்றம் சாட்டிஉள்ளார். குடியரசுக் கட்சியின் உறுப்பினர் சக் கிராஸ்லே, உள்நாட்டு பாதுகாப்பு செயலாளர் ஜான்சனுக்கு எழுதிஉள்ள கடிதத்தில் ஒபாமா நிர்வாகம் தன்னுடைய அதிகாரத்தை பிரயோகிப்பதில் தோல்வி அடைந்துவிட்டது என்று குற்றம் சாட்டிஉள்ளார். இவ்விவகாரத்தில் பொறுப்புடைய நாடுகள் தங்களுடைய நாட்டு மக்களை திரும்ப அழைக்கவில்லை என்று குறிப்பிட்டு உள்ளார்.
அமெரிக்கர்கள் இடையே ஆயிரக்கணக்கான கிரிமினல்களை விடுவிப்பதற்கு இது அனுமதிக்கிறது என்றும் கிராஸ்லே கூறிஉள்ளார்.
“பல நேரங்களில், கிரிமினல் வரலாறு கொண்ட தனிநபர்கள் நாட்டிற்குள் சட்டவிரோதமாக நுழைந்து விடுகின்றனர், வீசா காலம் முடிந்த பின்னர் அமெரிக்காவிலே தங்கிவிடுகின்றனர். கொலைகளில் தொடர்புடைய பயங்கரமான கிரிமினல்கள் ஒவ்வொரு நாளும் விடுவிக்கப்படுகின்றனர், அவர்களை சொந்த நாட்டிற்கு அழைத்து செல்வதில் அவர்களுடைய நாடுகள் ஒத்துழைப்பு அளிப்பது கிடையாது. இதுபோன்ற முடிவுகளாலும், கிரிமினல்களின் சொந்த நாடுகள் ஒத்துழைப்பு இல்லாமை காரணமாகவும் கடந்த 2015 நிதியாண்டில் மட்டும் 2,166 தனிநபர்கள் விடுவிக்கப்படுகின்றனர்.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்னதாக 6,100-க்கும் அதிகமானோர் விடுவிக்கப்பட்டனர் என்று குறிப்பிட்டு உள்ளார்.
அமெரிக்காவுடன் ஒத்துழைப்பு அளிக்கவில்லை என்று தற்போது 23 நாடுகள் முத்திரையிடப்பட்டு உள்ளது. அவைகளில் கியூபா, சீனா, சோமாலியா, இந்தியா மற்றும் கானா ஆகிய 5 நாடுகள் மட்டும் முதன்மை இடங்களை பிடித்து உள்ளன. இதற்கிடையே ஒத்துழைப்பில் பலவீனம் தொடர்பாக 62 நாடுகளை அமெரிக்க குடியேற்ற மற்றும் சுங்க அமலாக்கப்பிரிவு கண்காணித்து வருகிறது, ஆனால் இதுவரையில் அந்நாடுகள் ஒத்துழைப்பு அழிக்கவில்லை என்று கருத்தப்படவில்லை என்று கிராஸ்லே கூறிஉள்ளார். குடிவரவு மற்றும் குடியுரிமை சட்டத்தின் 243(d) பிரிவை இயற்றிய போதே அமெரிக்க காங்கிரஸ் இப்பிரச்சனையை சரிசெய்துவிட்டது என்பதையும் ஜான்சனுக்கு நினைவுபடுத்திஉள்ளார்.
243(d) பிரின் படி குடியேறிகளை வெளியேற்றுவது தொடர்பாக சம்பந்தப்பட்ட நாடுகளுக்கு அமெரிக்கா நோட்டீஸ் வழங்கிய பின்னர் அந்நாடு தங்கள் நாட்டு பிரஜைகளை திரும்பபெற மறுத்தாலோ, நடவடிக்கை எடுப்பதில் காலம் தாழ்த்தினாலோ குடியேற்ற மற்றும் குடியுரிமையற்ற விசா வழங்குவதை தடுக்க அமெரிக்கா தேவையான நடவடிக்கையை மேற்கொள்ளலாம் என்று கிராஸ்லே கூறிஉள்ளார்.
– See more at: http://www.canadamirror.com/canada/65009.html#sthash.o3ERqDT2.dpuf