யூரோ கிண்ணம்: “நாக்-அவுட்” சுற்றில் நடையைக் கட்டிய அணிகள்.
யூரோ கால்பந்து தொடர் போட்டிகள் பிரான்சில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்றுடன் “நாக்-அவுட்” சுற்றுப் போட்டிகள் முடிவடைந்தது.
அடுத்த சுற்றுப் போட்டிகளான காலிறுதிப் போட்டிகள் எதிர்வரும் 30 ஆம் திகதி முதல் ஆரம்பமாகிறது.
இந்த நிலையில் “ரவுண்ட்-16” சுற்றுப் போட்டிகளில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சில முன்னணி அணிகள் அதிர்ச்சிகரமாக தோற்று தொடரில் இருந்துவெளியேறின.
இதில் நடப்பு சாம்பியன் ஸ்பெயின், இங்கிலாந்து, அங்கேரி, சுலோவாக்கியா, அயர்லாந்து குடியரசு, குரோஷியா, சுவிட்சர்லாந்து, வடக்கு அயர்லாந்து ஆகிய அணிகள் தொடரில் இருந்து வெளியேறியுள்ளன.
அதே சமயம் போலந்து, போர்த்துக்கல், ஜேர்மனி, பிரான்ஸ், இத்தாலி, பெல்ஜியம், வேல்ஸ், ஐஸ்லாந்து ஆகிய அணிகள் காலியிறுதிக்கு தகுதி பெற்றுள்ளன.
எதிர்வரும் 30 ஆம் திகதி நடக்கும் முதல் காலிறுதிப் போட்டியில் போர்த்துக்கல் அணி போலந்தை சந்திக்கிறது.