பிரதமர் ரணில் விக்ரமசிங்க இதன் பிறகாவது பொய் சொல்வதை நிறுத்திக் கொள்ளட்டும் என பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மம்பில தெரிவித்தார்.
நாம் இன்னும் அரசியலமைப்பு சட்ட மூலம் அமைக்கவில்லையெனவும், தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஒற்றையாட்சி முறைமைக்கு சம்மதம் தெரிவித்துள்ளது. இது இந்த அரசாங்கம் அடைந்துள்ள வெற்றியாகும் எனவும் பிரதமர் நேற்றும் கருத்துத் தெரிவித்திருந்தார் என கம்மம்பில எம்.பி. குறிப்பிட்டார்.
பிரதமரினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், முதலாவது வசனமே புதிய அரசியலமைப்பு சட்ட மூலத்தில் என ஆரம்பிக்கப்பட்டுள்ளது எனவும் கம்மம்பில எம்.பி. சுட்டிக்காட்டினார்.
அரசியலமைப்பில் பிரிபடாத நாடு எனக் குறிப்பிட்டு விட்டு, பிரிவதற்குரிய அத்தனை நடவடிக்கைகளையும் முன்னெடுத்தால், நாடு பிரிக்கப்படும் என்பது ஸ்பெய்னின் வரலாறு எமக்கு கற்றுத் தரும் பாடமாகும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.