பிரிவு 50-ஐ பிரிட்டன் பிரயோகிக்கும் வரை வெளியேறுவதற்கு பேச்சுவார்த்தை நடைபெறாது – ஜெர்மனி.
பிரிவு 50 என்று அறியப்படும் முறையான வழிமுறையை லண்டன் தொடங்குவது வரை, பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறும் நிபந்தனைகள் பற்றிய பேச்சுவார்த்தைகள் நடைபெறாது என்று ஜெர்மானிய சான்சலர் ஏங்கெலா மெர்கலின் பேச்சாளர் தெரிவித்திருக்கிறார்.
ஒரு தேக்கநிலையை யாரும் விரும்பவில்லை என்று ஸ்டெஃபென் செய்பர்ட் கூறியிருக்கிறார்.
பிரிட்டிஷ் அரசின் நிலைக்கும், ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு விலகப் பரப்புரை கொண்ட முக்கிய நபர்களின் நிலைக்கும் முரண்பாடாக இந்த நிலைபாடு உள்ளது.
பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலக வாக்களித்திருப்பதால் உருவாகியிருக்கும் நெருக்கடிக்கு ஐரோப்பிய ஒன்றியத்தின் பதிலை, உறுப்பு நாடுகள் ஒப்புகொள்வதற்கு முயலும் முயற்சியில் , பிரான்ஸ் மற்றும் இத்தாலி தலைவர்களை ஜெர்மானிய அரசத் தலைவி ஏங்கெலா மெர்கல் இன்று சந்திக்க இருக்கிறார்.
நாளை அங்கு ஐரோப்பிய ஒன்றிய உச்சி மாநாடு ஒன்றை நடத்துவதற்கு தயார் செய்வதற்காக ஐரோப்பிய ஆணையக் கூட்டம் ஒன்றை பிரஸ்ஸல்ஸ் நடத்துகிறது.