சொந்த மகள்களை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்த தாயார்: காரணம் என்ன?
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் குடியிருப்பு பகுதியில் சொந்த மகள்கள் இருவரை தாயாரே துப்பாக்கியால் சுட்டு கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டெக்சாஸ் மாகாணத்தின் ஹூஸ்டன் பகுதியில் இந்த அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது. சம்பவத்தினை அடுத்து பொலிசாருக்கு தொடர்ந்து தொலைப்பேசி அழைப்புகள் வரவே, தகவல் திரட்டும் பொருட்டு Fulshear பகுதியில் அமைந்துள்ள அந்த குடியிருப்பு பகுதிக்கு வந்துள்ளனர்.
அப்போது குறிப்பிட்ட முகவரி கொண்ட அந்த குடியிருப்பின் முன்னர் இரண்டு இளம் வயது பெண்கள் ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளனர்.
அவர்களின் அருகாமையில் துப்பாக்கியை ஏந்தியபடி 42 வயது மதிக்கத்தக்க பெண்மணி ஒருவர் நின்றுகொண்டிருந்துள்ளார்.
இந்த நிலையில் சுதாரித்துக்கொண்ட பொலிசார் அந்த பெண்மணியுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதுடன், அவரிடம் இருந்த துப்பாக்கியை கீழே வீச வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.
ஆனால் துப்பாக்கியை வீச மறுத்து அடம் பிடித்த அந்த பெண்மணியை வேறு வழியின்றி பொலிசார் சுட்டு வீழ்த்த வேண்டிய நிலை ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
பொலிசாரால் சுட்டு வீழ்த்தப்பட்ட அந்த பெண்மணி Christy Sheats, இவரது குடும்பத்தில் ஏற்பட்ட தகராறு காரணமாக, ஆத்திரத்தில் தமது மகள்கள் Taylor Sheats(22), Madison Sheats(17) ஆகியோரை தம்மிடம் இருந்த துப்பாக்கியால் சுட்டுள்ளார்.
இதில் Madison சம்பவயிடத்திலேயே துடிதுடிக்க இறந்துள்ளார், ஆனால் Taylor படுகாயத்துடன் உயிருக்கு போராடி வந்துள்ளார்.
பொலிசார் அவரை மீட்டு மருத்துவமனையில் கொண்டு சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அவரும் இறந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.
இச்சம்பவத்தின்போது கிறிஸ்டியின் கணவர் வீட்டினுள்தான் இருந்துள்ளார். ஆனால் மிகவும் மன உளைச்சலால் பாதிக்கப்பட்டிருந்ததால் அவரையும் மருத்துவமனையில் பொலிசாரால் அனுப்பி வைக்கப்பட்டார்.
குடும்ப பிரச்னை காரணமாகவே இந்த படுகொலை நடந்துள்ளதாக முதற்கட்ட விசாரணைகள் தெரிவிக்கின்றன.