தேவையான சட்ட திருத்தங்களை விரைவாக முன்னெடுத்து பாடசாலை பிள்ளைகளை இலக்காகக்கொண்டு பாடசாலை சூழலில் இடம்பெறும் பல்வேறு வகையான போதைப்பொருள் விற்பனை நடவடிக்கைகளை முற்றாக இல்லாதொழிப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.
இதற்காக அனைத்து தரப்பினர்களினதும் பங்களிப்பைப் பெற்றுக் கொள்ளுமாறும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
போதைப் பொருட்களை கட்டுப்படுத்தல் தொடர்பாக நேற்று (10) ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இந்த பணிப்புரையை விடுத்துள்ளார்.