2018ம் ஆண்டில், “குலேபா, வாயாடி பெத்த, சொடக்கு மேல, சின்ன மச்சான், நீயும் நானும், சிம்டாங்காரன்” ஆகிய பாடல்கள் மட்டுமே யூ டியுபில் 3 கோடி பார்வைகளைக் கடந்து சாதனை புரிந்தன. மற்ற பாடல்கள் அதற்கும் குறைவான பார்வைகளைத்தான் பெற்றன.
‘மாரி 2’ படம் 2018ல் வெளிவந்தாலும், அந்தப் படத்தில் இடம் பெற்ற ‘ரவுடி பேபி’ பாடலின் வீடியோவை 2019ல் கடந்த வாரம் தான் யு டியுபில் வெளியிட்டார்கள். அந்தப் பாடல் வெளியான ஒரு வாரத்திற்குள்ளாகவே 4 கோடி பார்வைகளைக் கடந்து புதிய சாதனையைப் படைத்திருக்கிறது. இந்த ஆண்டின் முதல் பெரிய படங்கள் என்று பேசப்படும் ‘பேட்ட, விஸ்வாசம்’ ஆகிய படங்களின் பாடல்கள், கடந்த வருடத்தின் பெரிய படம் என பேசப்பட்ட ‘சர்கார்’ படத்தின் பாடல்கள் ஆகியவற்றின் பார்வைகளையெல்லாம் சர்வ சாதாரணமாக முறியடித்து இந்தப் பாடல் முன்னேறிக் கொண்டிருக்கிறது.
தொடர்ந்து இந்தப் பாடலை தினமும் பல லட்சம் பேர் திரும்பத் திரும்பப் பார்த்து வருவதால் அதன் பார்வைகளும் ஏறிக் கொண்டே வருகிறது. அடுத்த சில நாட்களில் இந்தப் பாடல் 5 கோடி பார்வைகளைக் கடந்துவிடும்.
சினிமா ரசிகர்கள் ‘பேட்ட, விஸ்வாசம்’ என பேசிக் கொண்டிருக்க, அந்தப் படத்தின் பாடல்கள் ரசிகர்களைச் சென்று அதிகம் சேரவில்லை. ஆனால், எந்த பரபரப்பும் இல்லாமல், ‘ரவுடி பேபி’ தனி சாதனையைப் படைத்துக் கொண்டிருக்கிறது.