முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட பாரிய குற்றச்சாட்டு கடந்த 8 வருடங்களாக மூடி மறைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
குறித்த முறைப்பாடு குற்ற விசாரணை திணைக்களத்தினால் மூடி மறைக்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இது தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் முறைப்பாடு செய்யப்படவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
கொழும்பு துறைமுகத்தில் மெரயின் நிறுவனம் தனியார்படுத்தப்பட்டமைக்கு எதிராக வழங்கு தாக்கல் செய்த பின்னர் உச்ச நீதிமன்றத்தினால் அந்த வர்த்தக ஒப்பந்தம் இரத்து செய்யப்பட்டுள்ளது. கொழும்பு துறைமுகத்தில் 6 ஏக்கரை குறைந்த விலையில் வழங்கப்பட்டமை தொடர்பில் அப்போதைய ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்கவுக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாாரதுங்க இந்த சம்பவத்திற்கு தொடர்புப்பட்டமை தொடர்பில் விசாரணை மேற்கொள்ளுமாறு நீதிமன்றம் குற்ற விசாரணை பொலிஸாரிடம் அறிவித்த போதிலும் 8 வருடங்களாக விசாரணைகள் உரிய முறையில் முன்னெடுக்கப்படவில்லை.
தற்போது பொலிஸ் திணைக்களம் ஜனாதிபதியின் கீழ் உள்ளமையினால் இந்த விசாரணை நடவடிக்கைகளை உரிய முறையில் விரைவில் மேற்கொண்டு அவசியமான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதியிடம் கோரவுள்ளதாக வாசுதேவ நாணயக்கார குறிப்பிட்டுள்ளார்.