எதிர்கட்சி கூட்டணி தொடர்பில் அரசாங்கத்துக்கு அச்சம் ஏற்பட்டுள்ளமையால், அதனை குழப்பும் செயற்பாட்டில் அரசாங்கம் ஈடுபடுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். அவர் தொடர்ந்து கூறுகையில்,
“பொதுஜன பெரமுனவுடன் கூட்டாக செயற்படும் கட்சிகளுடன் இன்னும் பல கட்சிகள் இணைந்துகொள்ளவுள்ளன.
இந்நிலையில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியும் இணைந்து செயற்படுவதற்கு விருப்பத்தில் உள்ளது. அதன்படி பாரிய கூட்டணியொன்றை மிக விரைவில் நிச்சயம் அமைப்போம்.
ஆனால், இவ்வாறு அமையவுள்ள பாரிய கூட்டணியை குழப்புவதற்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க சதித்திட்டங்களை தீட்டி வருகின்றார்” என வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.