Enbridge வாடிக்கையாளர்களின் கட்டணம் 7 சதவிகதத்தால் குறைகின்றது
கனடா-ரொறொன்ரோ.Enbridge எரிவாயு விநியோகஸ்தரிகளிடமிருந்து வாங்கும் குடியிருப்பு வாடிக்கையாளர்கள் அவர்களது இயற்கை எரிவாயு பில்லில் ஒரு இடைவெளியை பெறுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிர் வரும் யூலை 1-ந்திகதியிலிருந்து புதிய கட்டணத்திற்கான ஒப்புதலை ஒன்ராறியோ சக்தி வாரியத்திடமிருந்து Enbridge பெற்றுள்ளது.
சாதாரண குடியிருப்பு வாசி மொத்த கட்டணத்தில் சுமார் 7சதவிகிதம் அல்லது வருடத்திற்கு 63டொலர்கள் குறைவை காண்பர் என Enbridge தெரிவித்துள்ளது.