கனடாவில் முஸ்லிம் அகதிகளுக்கு ஆதரவாக ரொரோன்ரோவில் விளம்பரங்கள்
அண்மைய காலங்களில் கனடாவிற்குள் குடி புகுந்த முஸ்லிம் அகதிகளுக்கு ஆதரவாக ரொரோன்ரோ நகர பேரூந்து தரிப்பிடங்களில் விளம்பரங்கள் ஒட்டப்பட்டுள்ளது.இவை நகரில் உள்ள இஸ்லாமிய வெறுப்பு மற்றும் குடியேற்றவாசிகளிற்கெதிரான போக்கு ஆகியவைகளைக் கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளன.
‘அகதிகள் ரொரோன்ரோவின் ஒரு பகுதி’ என்றும் முஸ்லிம்களிற்கெதிரான வெறுப்பிற்கு ரொரோன்ரோவில் இடமில்லை எனவும் இந்த விளம்பரங்கள் உணர்த்துகின்றன.
Ontario Council of Agencies Serving Immigrants (OCASI) என்ற குடிவரவாளர்களிற்கு சேவை புரியும் நிறுவனமும், ரொரோன்ரோ மாநகரசபையும் இணைந்து இந்த விளம்பரப் பிரச்சாரத்தை முன்னெடுத்துள்ளன.
குறிப்பாக கடந்த டிசம்பர் மாதத்தில் சிரிய அகதிகளின் அதிகளவிலான வருகை தொடர்பாகவும், இவ்வாண்டின் ஆரம்ப காலப்பகுதியில் நகரில் இடம்பெற்ற முஸ்லிம்களிற்கெதிரான பல குற்றச்செயல்கள் தொடர்பாகவும் இந்த விளம்பரம் பிரசுரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாக்கும்