நெடுஞ்சாலை 407ன் புதிய நீட்டம் டர்ஹாம் பிரதேச்தில் இன்று ஆரம்பம்.
கனடா-இன்று முதல் டர்ஹாம் பிரதேச நெடுஞ்சாலை 407ன் போக்குவரத்து இலவசமாக உபயோகிக்க கூடியதாக இருக்கும்.
உத்தியோக பூர்வமாக இன்று காலை பாதை திறந்து வைக்கப்பட்டது. பிக்கரிங்கில் புறொக் வீதியில் இருந்து ஒசாவா ஹாமொனி வீதிவரை ஆரம்பிக்கப்படும் இந் நெடுஞ்சாலையில் 2017வரை கட்டணம் அறவிடப்பட மாட்டாதென மாகாண அரசாங்கம் தெரிவித்துள்ளது.
நெடுஞ்சாலை 407ஐயும் 401ஐயும் இணைக்கும் 412நெடுஞ்சாலையும் இன்று திறக்கப்படும் எனவும் இப்பாதைக்கும் 2017வரை கட்டணம் அறவிடப்படமாட்டாதென கூறப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் இறுதிக்கட்டம் 2020ல் பூர்த்தி செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இப்புதிய நெடுஞ்சாலை 407 டர்ஹாம் பகுதியில் பொருளாதார வாய்ப்புக்களை ஊக்குவிப்பது மட்டுமன்றி பயணிகளிற்கும் ஒரு மாற்று வழித்திட்டத்தை வழங்கும் என ஒன்ராறியோ போக்குவரத்து அமைச்சர் Steven Del Duca தெரிவித்தார்.
744 total views, 744 views today
– See more at: http://www.canadamirror.com/canada/64578.html#sthash.xffuHHCr.dpuf