தமிழகத்தில் தேனி மாவட்டத்தில் உள்ள குரங்கனி மலைப்பகுதியில் ஏற்பட்ட தீவிபத்தில் அங்கு டிரெக்கிங் சென்ற 23 பேர் பரிதாபமாக பலியான நிலையில், அங்கு டிரெக்கிக் செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது.
தற்போது குரங்கனி மலையில் பல்வேறு நிபந்தனைகளுடன் மீண்டும் டிரெக்கிங் செல்ல அனுமதி வழங்கப்பட்டுஉள்ளது.
கடந்த மார்ச் 11ம் தேதி தேனி மாவட்டம் போடி அருகே குரங்கணி மலைப்பகுதிக்கு டிரெக்கிங் சென்றவர்கள் அங்கு பரவிய காட்டுத்தீயில் சிக்கி 11 பேர் ஸ்பாட்டிலேயே மரணத்தை தழுவினர். மேலும் பலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மொத்தம் 23 பேர் மரணத்தை தழுவினர். இதையடுத்து அங்கு டிரெக்கிங் செல்ல தடை விதிக்கப்பட்டது.
இந்த நிலையில் குரங்கனி மலைப்பகுதியில் டிரெக்கிங் செல்ல கடும் கட்டுப்பாடுகளுடன் தமிழக வனத்துறை அனுமதி வழங்கி உள்ளது.
குரங்கணியில் இருந்து டாப் ஸ்டேசன் வரை அனுமதிக்கப்பட்ட பகுதியில் மட்டுமே மலையேற்றப் பயிற்சி செய்ய வேண்டும்.
மலையேற்ற பயிற்சிக்கு செல்ல விரும்புபவர்கள், போடி வனச்சரகருக்கு விண்ணப்பித்து மாவட்ட வன அலுவலரின் ஒப்புதலைப் பெற வேண்டும்.
காலை 8 மணி முதல் 5 மணி வரை மட்டுமே மலையேற்றத்திற்கு அனுமதி அளிக்கப்படும்
எளிதில் தீப்பற்றக் கூடிய பொருட்களை எடுத்துச் செல்லக் கூடாது
இவ்வாறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள.