இரண்டாம் உலக போரின் போது கட்டாய பணியில் ஈடுபடுத்த பட்ட ஊழியர்களுக்கு நிவாரண ஊதியம் அளிக்க ஜப்பானின் மிட்சுபிஷி ஹெவி இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்திற்கு தென் கொரிய உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
கொரியாவின் கீழ் நீதிமன்றம், மிட்சுபிஷி நிறுவனத்தினரால் கட்டாய பணியில் ஈடுபடுத்த பட்ட 6 பெண்களுக்கு, உத்தரவிட்ட தொகை 100 மில்லியன் வோன், அதை உச்ச நீதி மன்றம் 150 மில்லியன் வோன் ஆக உயர்த்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும், ஆண்கள் 6 பேருக்கு, தலா 80 மில்லியன் தர ஆணை பிறப்பித்துள்ளது. இவர்கள் அனைவரும் 1944 ஆம் ஆண்டு நடந்த உலக போரின் போது மிட்சுபிஷி-யின் கப்பல் தளம் மற்றும் கன ரக தொழிற்சாலைகளில் பணி புரிந்தவர்கள்.
கொரியா,1910 ஆண்டு முதல், 1945-ம் ஆண்டு ஜப்பான் அமெரிக்கா விடம் சரணடையும் காலம் வரை ஜப்பானிய காலனியாக இருந்தது.
தற்போது வழங்கப்பட்டுள்ள தீர்ப்பு கடந்த அக்டோபர் மாதம் உச்ச நீதிமன்றம் அளித்த வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பைப் பிரதிபலிக்கிறது.
கடந்த மாதம், ஜப்பானின் நிப்பான் ஸ்டீல் மற்றும் சுமிடோமோ மெட்டல் நிறுவனம் இது போன்ற கட்டாய பணியில் தொழிலாளர்களை வேளையில் அமர்த்தியதற்காக 88,700 டாலர்களை நிவாரண தொகையாக வழங்க வேண்டும் என நீதி மன்றம் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.