சர்வதேச தேரவாத பௌத்த பல்கலைக்கழக சங்கத்தின் ஐந்தாவது சர்வதேச மாநாட்டின் அங்குரார்ப்பண நிகழ்வு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் நேற்று (27) கொழும்பில் ஆரம்பமானது.
தேரவாத பௌத்த நாடுகளுக்கிடையில் சமய, கலாசார உறவுகளை மேலும் பலப்படுத்தும் நோக்குடன், சர்வதேச தேரவாத பௌத்த பல்கலைக்கழக சங்கம் இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை நடாத்தும் மாநாட்டிற்கான அனுசரணையை இம்முறை இலங்கை வழங்கியுள்ளது.
தேரவாத பௌத்த தத்துவம் எதிர்நோக்கும் சவால்களுக்கான வளமான தீர்வுகளை கண்டறிவதற்கு இம்மாநாடு மிகவும் முக்கியமானது என்பதுடன், நவீன உலகிற்கு பொருத்தமான வகையில் தேரவாத பௌத்த தத்துவத்தை சமூக மயப்படுத்துவதும் தேரவாத பௌத்த கல்வித்துறை ஆராய்ச்சிகளை மேம்படுத்துவதும் இதன் மற்றுமொரு நோக்கமாகும்.