இளம்பெண்ணை சரமாரியாக கத்தியால் குத்திய நபர்: பொலிசாரிடம் கூறிய பகீர் வாக்குமூலம்
பிரான்ஸ் நாட்டில் இளம்பெண் ஒருவரை சரமாரியாக கத்தியால் குத்திய நபர் ஒருவர் பொலிசாரிடம் அளித்துள்ள வாக்குமூலம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு பிரான்ஸில் உள்ள Rennes என்ற நகரில் தான் இந்த கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது.
கடந்த திங்கள் கிழமை அன்று 19 வயதான இளம்பெண் ஒருவரை நபர் ஒருவர் கத்தியால் சரமாரியாக தாக்கியுள்ளதாக பொலிசாருக்கு புகார் கிடைத்துள்ளது.
புகாரை பெற்ற பொலிசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தபோது, இளம்பெண் வயிற்றிலும் கைகளிலும் பலத்த காயங்களுடன் கதறி அழுதுக்கொண்டு இருந்துள்ளார்.
இளம்பெண்ணை மீட்ட பொலிசார் அவரை மருத்துவமனையில் அனுமதித்துவிட்டு 32 வயதான அந்த நபரை கைது செய்தனர்.
நபரிடம் விசாரணை செய்தபோது, ‘நான் ஒரு இஸ்லாமியன். இது ரமழான் நோன்பு மாதம் என்பதால், யாரையாவது உயிர் தியாகம் செய்ய வேண்டும் என எனக்கு உத்தரவு வந்தது.
எனது காதுகளில் தொடர்ந்து ஒலித்துக்கொண்டு இருந்த அந்த வார்த்தைகள் பின்பற்றி இளம்பெண்ணை கத்தியால் குத்தியதாக’ பொலிசாரிடம் தெரிவித்துள்ளார்.
நபரின் வாக்குமூலம் கேட்டு அதிர்ச்சி அடைந்த பொலிசார் கைது செய்யப்பட்டுள்ள நபர் ஒருவர் மனநல நோயாளி என்பதை கண்டுபிடித்தனர்.
நபர் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டுருந்தாலும், அவர் ஒரு மனநோயாளி என்பதால் அவரை மனநல மருத்துவமனைக்கு பொலிசார் அனுப்பி வைத்துள்ளனர்.