நாட்டில் ஏற்ப்பட்டுள்ள தற்போதைய அரசியல் சூழல் நிலைமை மேலும் சிக்கலடையும் என்றால் நாட்டில் கொந்தளிப்பான சூழல் உருவாகும். அப்படி உருவாகும்போது கண்டிப்பாக வன்முறைகளை நோக்கியே நகரும்.
அது முஸ்லிம், மலையக, தமிழ்ச்சமூகங்களையே கூடுதலான பாதிப்பை ஏற்ப்படுத்தும் . தலைமைகள் எடுக்கும் தீர்மானங்களையிட்டு சிங்களத் தரப்புக்கு ஏற்படும் அபிப்பிராய பேதங்கள் மேற்குறித்த சமூகங்களின் மக்களின் மீதே வன்முறையாகக் கட்டவிழும்.
எனவே இந்த முக்கிய தருணத்தில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு பார்ப்போம் ,யோசிப்போம் என்கின்ற வசனங்களை விட்டுவிட்டு நிதானமாக உடனடியாக முடிவெடுக்க வேண்டி உள்ளது .
நாம் கலந்தாலோசிக்கிறோம், யோசிக்கிறோம் என்பதெல்லாம் இப்போதைக்கு முக்கியமானவை அல்ல காலம் கடந்த ஞானமாய் கூட்டமைப்பினர் பின்னர் யோசிக்காது சிங்கள அரசுக்கு பாடம் புகட்டும் முக்கிய தருணமாக இதை கருத வேண்டும் என easy24news.com அதிபர் கிருபா கிருசான் தெரிவித்துள்ளார் .