முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச பிரதமராக நியமிக்கப்பட்ட விதம் சட்ட ரீதியானதல்ல என அறிவிக்கப்பட்டுள்ளது.
சட்ட மா அதிபர் ஜயந்த ஜயசூரிய இதனை தெரிவித்துள்ளதாக தெரியவருகிறது.
சபாநாயகர் கரு ஜயசூரியவிற்கு இது தொடர்பில் சட்ட மா அதிபர் எழுத்து மூலம் அறிவித்துள்ளதாக உத்தியோகபூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.
ரணில் விக்ரமசிங்கவை பணி நீக்கம் செய்வதற்காக பயன்படுத்தப்பட்ட முறை சட்டத்திற்கு முரணானது என சட்ட மா அதிபர் சுட்டிக்காட்டியுள்ளதாக குறித்த தகவல்களில் குறிப்பிடப்படுகின்றன.
இந்த நிலையில் நாடாளுமன்றத்தை உடன் கூட்ட வேண்டும் என 126 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையொப்பமிட்ட கடிதம் சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
நாளைய தினம் நாடாளுமன்றத்தை கூட்டுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. இதனால் ரணில் ஆபத்தில் இருந்து தப்புவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.