கடந்த 2015ல் மலையாளத்தில் வெளியான ஒரு வடக்கன் செல்பி’ என்கிற வெற்றிப்படத்தை இயக்கிய ஜி.பிரஜித் அதை தொடர்ந்து தெலுங்கில் இருந்து அழைப்பு வர, அங்கே வடக்கன் செல்பி’ படத்தை ரீமேக் செய்து இயக்கினார். அதையடுத்து தற்போது மலையாளத்திற்கே திரும்பிவந்து பிஜூமேனனை வைத்து உண்மைச்சம்பவங்களின் பின்னணியில் த்ரில்லர் படம் ஒன்றை இயக்கி வருகிறார் பிரஜித்.
இந்தப்படம் கிட்டத்தட்ட முடியும் தருவாயில் உள்ளது. இந்தநிலையில் இவரது அடுத்த படத்தில் திலீப் ஹீரோவாக நடிக்க இருக்கிறார். ‘தொண்டிமுதலும் திரிக்சாட்சியும்’ படத்திற்கு கதை எழுதிய சஜீவ் பழூர் தான் இந்தப்படத்திற்கு கதை எழுதுகிறார். திலீப் தற்போது தான் நடித்துவரும் இரண்டு படங்களையும் முடித்ததும் இதில் நடிக்கவுள்ளாராம்.