இலங்கையின் புதிய பிரதமராக நியமிக்கப்பட்டுள்ள, ராஜபக்சே, ”பார்லிமென்டுக்கு உடனடியாக தேர்தல் நடத்த வேண்டும்,” என, வலியுறுத்தியுள்ளார்.
இலங்கையின் புதிய பிரதமராக பொறுப்பேற்றுள்ள, ராஜபக்சே, கொழும்பில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் பேசியதாவது:தற்போது நிலவும் பொருளாதார, அரசியல், சமூக பிரச்னைகளில் இருந்து, நாடு மீண்டு, மக்களுக்கு திட்டங்களின் பலன்கள் போய் சேர வேண்டும்.
இதற்காக, நாடு முழுவதும் மாகாணத் தேர்தலை நடத்த வேண்டும்.மேலும், மக்களின் விருப்பத்தை நிறைவேற்றக் கூடிய அரசு அமையும் வகையில், பார்லிமென்டுக்கு உடனடியாக தேர்தல் நடத்த வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.இலங்கை பார்லிக்கு, 2020 பிப்ரவரியில், அடுத்த தேர்தல் நடக்க உள்ளது. அதற்கு முன், அதிபர் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பது குறிப்பிடத் தக்கது.