ஏஆர். முருகதாஸ் இயக்கத்தில், ஏஆர்.ரஹ்மான் இசையமைப்பில் விஜய், கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி மற்றும் பலர் நடிக்கும் ‘சர்கார்’ படத்தின் டீசர் நேற்று மாலை 6 மணிக்கு யு டியூபில் வெளியிடப்பட்டது. வெளியான அடுத்த சில நிமிடங்களிலேயே அந்த டீசர் பல புதிய சாதனைகளைப் படைக்க ஆரம்பித்துவிட்டது.
அதோடு, ஒரு புதிய உலக சாதனையையும் படைத்துள்ளது. குறைந்த மணி நேரத்தில் 10 லட்சம் லைக்குகளைப் பெற்ற முதல் டீசர் என்ற பெருமை ‘சர்கார்’ டீசருக்குக் கிடைத்துள்ளது. இதற்கு முன்பாக ஹாலிவுட் படமான ‘அவெஞ்சர்ஸ் இன்பினிட்டி வார்’ படத்தின் டிரைலர் 24 மணி நேரத்தில் 10 லட்சம் லைக்குகளைப் பெற்றதே, ஒரு டீசர், அல்லது டிரைலரின் சாதனையாக இருந்தது. அந்த சாதனையை 292 நிமிடங்களில் சர்கார் படம் முறியடித்து புதிய உலக சாதனை படைத்துள்ளது.
ஓர் இரவுக்குள் 1 கோடி பார்வைகள், 1 மில்லியன் லைக்குகள் என அடுத்த கட்ட சாதனையை நோக்கி ‘சர்கார்’ டீசர் நகர்ந்து கொண்டிருக்கிறது.