சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு எஸ்.எம்.எஸ்.மூலம் மர்ம நபர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவின் மிக முக்கிய ரயில் நிலையங்களில் ஒன்றாக, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் திகழ்கிறது. இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கும் இங்கிருந்து ரயில்கள் இயக்கப்படுகின்றன. தினந்தோறும் லட்சக்கணக்கான மக்கள் வந்து செல்லும் இந்த ரயில் நிலையத்தில், தற்போது பண்டிகை காலம் என்பதால், இங்கு வரும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இந்நிலையில், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு மர்ம நபர் எம்.எம்.எஸ்.மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளார். அந்த எஸ்.எம்.எஸ்ஸில் ஜோத்பூர் ரயிலை கவிழ்க்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அதில் ஒரு தீவிரவாத அமைப்பின் பெயரும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையடுத்து, ரயில்வே காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.