‘ஒரு திரைப்படத்தில், ஒரு சில காட்சிகளில் மட்டும் தலை காட்டினாலும், படம் முடிந்து வெளியே செல்லும் ரசிகர்கள் மனதில், நம் நினைவு தான், வர வேண்டும். அப்படிப்பட்ட கேரக்டரில் மட்டுமே நடிக்க வேண்டும்’ என்பது, ஐஸ்வர்யா ராஜேஷின் விருப்பம்.
காக்கா முட்டை படத்துக்கு பின், இந்த விஷயத்தில் தெளிவாக இருக்கிறார், அவர். தற்போது, துருவ நட்சத்திரம், கானா உட்பட, அரை டஜன் படங்கள், அவரது கைவசம் உள்ளனவாம். ‘இவை எல்லாவற்றிலுமே, அவருக்கு நல்ல கேரக்டர்கள்’ என்கிறது, கோலிவுட் வட்டாரம். வட சென்னை படத்தில், ஐஸ்வர்யாவின் நடிப்புக்கு, ரசிகர்களிடம் இருந்து பாராட்டு குவிகிறதாம்.