இசைநிழ்சசியில் கலந்து கொண்டு இனிய பாடல்களை வழங்கவுள்ள பிரபல தென்னிந்திய திரைப்படப் பாடகர் சுரேந்தர் அவர்களின் வருகை நல்வரவாகுக! அவரை இந்த மண்ணுக்கு அழைத்த நண்பர் கிருபா கிருசான் அவர்களுக்கு பாராட்டுக்கள்!
நேற்று மாலை மார்க்கம் நகரில் உள்ள ஜேஸ்மின் பாங்குவற் மண்டபத்தில் நடைபெற்ற விசேட பத்திரிகையாளர்கள் மாநாடு மிகவும் நேர்த்தியாக நகர்ந்து சென்று சபையோருக்கு மிகுந்த மகிழ்வைக் கொடுத்தது. சிகரத்தைத் தொட்ட தொகுப்பாளர் சில்வியா பிரான்சிஸ் பத்திரிகையாளர் மாநாட்டை சிறப்பாக வழிநடத்தினார்.
புன்னகை பூத்த முகத்துடன் பரவலான கருத்துக்களை பகிர்ந்து கொண்டு அவரது பங்களிப்பு விழாவின் வெற்றிக்கு பலம் சேர்க்கும் என்பது உண்மை கனடாவில் நண்பர்கள் மத்தியில் நன்கு அறியப்பட்ட திரு கிருபா கிருசானின் easynews latestnews நிறுவனத்தின் “easy entertainment night 2018” மாபெரும் இசை நிகழ்ச்சி வருகின்ற சனிக்கிழமை ஸ்காபுறொ நகரில் அமைந்துள்ள தமிழிசை கலா மன்றத்தில் விமர்சையாக நடைபெற சகல ஏற்பாடுகளும் பூர்த்திசெய்யப்பட்டு இருக்கின்ற இந்த நேரத்தில் கனடாவில் மூன்று இசைச் செல்விகளின் நிர்வாகத்தில் இயங்கிவரும் நட்சத்திரா இசைக்குழுவுடன் சேர்ந்து பல பாடல்களினை மட்டுமன்றி பல முன்னணி நடிகர்களின் படங்களில் எல்லாம் தனது வசீகர குரலின் மூலம் படங்களின் வெற்றிக்கு பின்னணி குரல் கொடுத்த கலைமாமணி, நடிகர், பாடகர் , பின்னணி குரல் வித்தகர் எஸ் என் சுரேந்தர் அவர்கள் கனடாவிற்கு வருகை தந்துள்ளார் .
எதிர்வரும் சனிக்கிழமை இந்த நிகழ்ச்சி நடைபெறவுள்ளது இங்கு குறிப்பிட்த்தக்கது. பதித்துள்ளார். நட்ச்சத்திரா இசைக்குழு ஏராளமான இசை நிகழ்ச்சிகளை கனடாவில் நிகழ்த்தியிருக்கின்றது. மெல்லிசை மன்னர் எம்.எஸ். விஸ்வநாதனால் தனக்குப் பிடித்த குரல் என்ற பாராட்டைப் பெற்றவர். தான் இந்த பாடகர் சுரேந்தர்.
1980 களின் ஆரம்பத்தில் இளையராஜாவின் இசையில் பல பாடல்களை பாடியிருக்கிறார்.நடிகர் மோகனுக்கு தொடர்ந்து பின்னணி பேசியவர்.நடிகர் விஜயின் தாய் மாமாவான இவர்,விஜய் நடித்த ஒன்ஸ்மோர் படத்தில் ‘பூவே பூவே பெண்பூவே’ என்ற பாடலையும் ப்ரியமுடன் படத்தில் “ஒயிட் லகான் கோழி” பாடலையும் பாடியிருக்கிறார். நேரில் விழாவிற்கு வருகை தந்து பாடல்களை ரசித்தும் விழாவை வெற்றி விழாவாக்கும் வண்ணம் அனைவரையும் வேண்டுகின்றோம்