இனி ஒருபோதும் நாட்டில் யுத்தம் ஏற்படாது: யாழ். கட்டளைத் தளபதி
இலங்கையில் இனி ஒருபோதும் யுத்தம் ஏற்படப்போவதில்லை என தான் நம்புவதாக யாழ். கட்டளைத் தளபதி மேஜர் மஹேஸ் சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
யுத்தம் நிறைவடைந்தும் இராணுவத்தினர் வடக்கில் நிலைத்திருப்பது பொதுமக்களின் நன்மைக்காகவென்றும், அவர்களின் நன்மைக்காக இராணுவம் முழுமூச்சுடன் செயற்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
யாழ் படைத் தலைமையகத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் நேற்றைய தினம் கலந்து கொண்ட போதே கட்டளைத் தளபதி இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதேவேளை வடக்கில் இராணுவத்தினர் இருப்பது அவசியமற்றது என்றும், பொலிஸார் மட்டும் இங்குள்ள மக்களுக்கு பாதுகாப்பு அளித்தல் போதுமானது என்பதோடு,
யுத்தம் நிறைவடைந்து 7 வருடங்கள் கடந்தும் வடக்கில் உள்ள இராணுவ முகாம்கள் அகற்றப்படவில்லை என்று வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் வவுனியாவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் வடக்கில் நிகழும் அனர்த்த நிலைமைகள், வெவ்வேறு அசம்பாவிதங்களின் போது இராணுவத்தினர் மக்களுடன் இணைந்து சேவையாற்றுகின்றனர்.
சாதாரண பொதுமக்களின் அனைத்து பிரச்சினைகளையும் அருகில் இருக்கும் படை முகாம்களில் முன்வைத்தால் தீர்வு அல்லது நிவாரணங்கள் பெற்றுக்கொடுப்பதற்கு படையினர் தயாராக இருப்பதாகவும் மேஜர் ஜெனரல் மஹேஸ் சேனாரத்ன குறிப்பிட்டுள்ளார்.