பைரசியை ஒழிக்க தமிழ் சினிமாவினர் எத்தனையோ முயற்சி செய்து வருகிறார்கள். ஆனால் கட்டுப்படுத்த முடியவில்லை. இன்றைக்கு படங்கள் வெளியாகும் அன்றே ஆன்லைனில் படங்கள் ரிலீஸாகின்றன. இவற்றைத் தடுக்கும் வகையில் பல விஷயங்களைத் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் மேற்கொண்டு வருகிறது.
அதில், தியேட்டர்களில் இருந்து தான் திருட்டுத்தனமாகப் படம்பிடிக்கப்பட்டு பைரசிகள் உருவாகின்றன என்பது சமீபத்தில் கண்டறியப்பட்டது. இதுதொடர்பாக தயாரிப்பாளர்கள் சார்பில் புகாரும் அளிக்கப்பட்டது. இந்நிலையில் 10 தியேட்டர்களில் இருந்து படங்கள் படம் பிடிக்கப்பட்டது கண்டறியப்பட்டது.
அந்த தியேட்டர்களின் விபரத்தை தயாரிப்பாளர்கள் சங்கம் பட்டியலிட்டிருப்பதோடு, இனி இந்த தியேட்டர்களுக்கு எந்தவிதமான ஒத்துழைப்பையும் வழங்குவதில்லை எனத் தயாரிப்பாளர்கள் சங்கம் முடிவெடுத்து, க்யூப் நிறுவனத்துக்கும் இதைத் தெரிவித்துள்ளது. இதையே அடுத்தடுத்து ரிலீஸாகும் படங்களின் தயாரிப்பாளர்களும் செய்ய வேண்டும் எனத் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் கேட்டுக் கொண்டுள்ளது.
10 தியேட்டர்கள் விபரம்…
1. முருகன், கிருஷ்ணகிரி (மனுசனா நீ)
2. நயன்தாரா, கிருஷ்ணகிரி (கோலிசோடா 2)
3. கோமதி, மயிலாடுதுறை (ஒரு குப்பைக்கதை)
4. எல்லோரா, கரூர் (ஒரு குப்பைக்கதை)
5. பத்மாவதி, ஆரணி சேத்துப்பட்டு (மிஸ்டர் சந்திரமெளலி)
6. கவிதாலயா, கரூர் (தொட்ரா)
7. கவிதாலயா, கரூர் (ராஜா ரங்குஸ்கி)
8. சத்யம், பெங்களூரு (இமைக்கா நொடிகள்)
9. ஜெய் சாய் கிருஷ்ணா, விருத்தாச்சலம் (சீமராஜா)
10. சினிபொலிஸ், மங்களூர் (சீமராஜா)