ஆயிரக்கணக்கான ஆதரவாளர்கள் சனிக்கிழமை இடம்பெற்ற வருடாந்த வர்ணங்களின் படையெடுப்பில் கலந்து கொண்டு லண்டனில் இடம்பெற்ற குயின் எலிசபெத் 11அரசியாரின் 90-வது பிறந்தநாள் வைபத்தை கௌரவித்தனர். அரசி பிரகாசமான ஒரு சுண்ணாம்பு பச்சை நிற கோர்ட்டும் தொப்பியும் அணிந்து குதிரை வண்டியில் இருந்து மக்கள் கூட்டத்திற்கு கை அசைத்த வண்ணம் பவனிவந்தார்.இளவரசர் பிலப்பும் இவருடன் அருகில் அமர்ந்திருந்தார்.
1,500ற்கும் மேற்பட்ட படைவீரர்கள் மற்றும் 300 குதிரைகள் அணிவகுப்பில் கலந்து கொண்டன.சரித்திர பிரசித்தி பெற்ற படகுகள் பல தேம்ஸ் நதியில் அணிவகுத்து சென்றன.
அரசியின் பிறந்த நாள் ஊர்வலமாகிய இக்கொண்டாட்டம் ஒரு அரச பாரம்பரியமாக 18-ம் நூற்றாண்டிலிருந்து இடம்பெற்று வருகின்றது.அரசர் 7-வது எட்வேட் இந்த கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட முதல் மனிதராவார்.
அரசியார் மற்றய அரச குடும்பத்தினருடன் பக்கிங்ஹாம் மாளிகையின் பல்கனியில் சேர்ந்து நின்று வர்ண நிகழ்வின் இறுதிக்கட்டமாக அரச விமான படையினர் மூலம் நடாத்தப்பட்ட விமான கண்காட்சியையும் கண்டு களித்தார்.
– See more at: http://www.canadamirror.com/canada/64136.html#sthash.kT8DboB2.dpuf