சிதறிக் கிடக்கும் வெடிகுண்டுகள்! வுக்கு எதிராக அணி திரளும் இராணுவத்தினர்!
கொஸ்கம இராணுவ முகாமின் ஆயுத கிடங்குகள் வெடித்தமை தொடர்பில் கோத்தபாய ராஜபக்ச வெளியிட்டுள்ள கருத்து, இராணுவத்தினர் கடுமையான அதிருப்தி மற்றும் எதிர்ப்புக்கு உள்ளாகியுள்ளதாக தெரியவந்துள்ளது.
தான் பாதுகாப்பு செயலாளராக செயற்பட்ட சந்தர்ப்பத்தில் இந்த முகாமின் ஆயுதக் கிடங்கு வெடித்திருந்தால், இராணுவ தளபதி பதவியை இராஜினாமா செய்திருக்க வேண்டும் அல்லது தன்னால் நீக்கப்பட்டிருப்பார் என கோத்தபாய கருத்து வெளியிட்டிருந்தார்.
கோத்தபாயவின் கருத்து ஊடகங்களில் வெளியாகியுள்ள நிலையில், இராணுத்தின் உயர் அதிகாரிகள் கடுமையான எதிர்ப்பு வெளியிட்டு வருகின்றனர்.
கோத்தபாய இராணுவத்தில் செயற்பட்ட காலப்பகுதியில் யுத்தத்திற்கு பயந்து தப்பி சென்று வெளிநாட்டில் வசித்ததாக இராணுவத்தின் உயர் அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
அத்துடன் அவர் பாதுகாப்பு செயலாளராக செயற்பட்ட சந்தர்ப்பத்தில் வவுனியா மற்றும் கரடியனாறு இராணுவ முகாமினுள் இருந்த ஆயுத கிடங்குகள் வெடித்ததாகவும், அந்த சந்தர்ப்பத்தில் அவர் தற்போது பேசுவதனை போன்று எந்தவொரு செயற்பாடுகளையும் மேற்கொள்ளவில்லை என இராணுவ அதிகாரிகள் உண்மையை வெளியிட்டுள்ளனர்.